தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை.. விபத்து ஏற்படும் அபாயம்! - Tiruvallur news in tamil

திருவள்ளூர்: குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள போரூர்-குன்றத்தூர் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kundrathur road issues

By

Published : Oct 24, 2019, 2:35 PM IST

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக விளங்குவது போரூர்-குன்றத்தூர் சாலை. குன்றத்தூர், நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் எடுத்துச்செல்வதற்காக இந்த சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

ஆனால் பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்து வருவதால், இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன.

குண்டும் குழியுமாகவுள்ள போரூர்-குன்றத்தூர் சாலை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சாலை விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள், குறிப்பாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்' என்கின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ABOUT THE AUTHOR

...view details