பூவை மூர்த்தியாரின் நினைவுநாள் மாவீரர் நாளாக அனுசரிப்பு - undefined
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியாரின் நினைவு நாள் மாவீரர் நாளாக அனுசரிக்கப்பட்டது.
![பூவை மூர்த்தியாரின் நினைவுநாள் மாவீரர் நாளாக அனுசரிப்பு poovai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:32:36:1630598556-tn-trl-02-moorthyar-vis-scr-tn100036-02092021175046-0209f-1630585246-261.jpg)
திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியார் நினைவு நாள் மாவீரர் நாளாக தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியார், பூவை மூர்த்தியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்த்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஆண்டுதோறும் மாவீரர் நாளில் நடைபெறும் ரத்த தான முகாமினை பூவை ஜெகன் மூர்த்தியார் தொடங்கிவைத்தார்.
பின்னர் புரட்சி பாரதம் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூவை மூர்த்தியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.