திருவள்ளூரைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில், ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 21) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் பணிபுரிந்து வந்த பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் பிற ஊழியர்கள் சிலருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.