திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
'பூந்தமல்லியில் குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும்' திமுக வேட்பாளர் உறுதி - thiruvalluer
திருவள்ளூர்: பூந்தமல்லி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, அத்தொகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி
செவ்வாபேட்டை, தொட்டிக்கலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கு, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிநீர்ப் பிரச்சனை தீரும். இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவமனை, நாள் முழுவதும் மினி பேருந்துகள் இயக்கப்படும்" என வாக்குறுதி அளித்தார்.