தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயதசமியை முன்னிட்டு பொன்னேரியில் முதன்முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி! - ஓம்காரா நாட்டியாஞ்சலி இந்நிகழ்ச்சி

திருவள்ளூர்: விஜயதசமியை முன்னிட்டு பொன்னேரி அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் முன்பு முதன்முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

bharatanatyam-program

By

Published : Oct 9, 2019, 9:24 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி முதன் முறையாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றது. கடந்த 10 நாள்களாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஓம்காரா பரத நாட்டியப் பள்ளி இயக்குநர் பிரதீஷ் சிவானந்தன், செயலாளர் சிவா பிரதீஷ், ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாத் ஆகியோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவியர் நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

நாட்டியாஞ்சலியின் இறுதி நாளான விஜயதசமி தினத்தில் கேரள பாணியில் சண்டையிடும் மள்ளர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனமாடிய மாணவ மாணவியரை விழா குழுவினர் பாராட்டினர்.

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் சென்னை, பழவேற்காடு, மீஞ்சூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதையும் படிக்க: 'ஒழிந்தான் மகிஷாசூரன்; இனி ஓய்வெடுப்பார் மகாகாளி!'- தோவாளையில் நடந்த முத்தாரம்மனின் வதம்!

ABOUT THE AUTHOR

...view details