தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவியிடம் செல்போனில் ஆபாசப் பேச்சு - கைது செய்யக்கோரி மாணவிகள் கலகக்குரல்! - கைது செய்ய கோரி மாணவிகள் போராட்டம்

பொன்னேரி அரசுக் கல்லூரியில் மாணவி ஒருவரிடம் பேராசிரியர் செல்போனில் ஆபாசமாகப் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கல்லூரி மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு!- கைது செய்ய கோரி மாணவிகள் போராட்டம்!
கல்லூரி மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு!- கைது செய்ய கோரி மாணவிகள் போராட்டம்!

By

Published : Apr 9, 2022, 6:34 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசுக்கல்லூரியில் 4745 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஒருவர் மாணவியை தமது வீட்டிற்கு வருமாறு செல்போனில் அழைக்கும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் மகேந்திரன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, அந்த மாணவியை வீட்டிற்கு வரச்சொல்லியும், இறுதியாண்டு படித்து வருவதால் வீட்டுக்கு வந்தால் உபயோகமாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவி தான் ஏன் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமெனக் கேள்வி எழுப்பியதற்கு நட்பை வளர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அலைபேசியில் ஆபாசப் பேச்சு:சிறிது நேரம் ஒன்றும் புரியாத மாணவி சுதாரித்துக்கொண்டு அப்படி எல்லாம் நட்பை வளர்க்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு ஒரு சில பாடக்குறிப்புகள் வேண்டும் எனவும் அதை கூகுளில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்க வேண்டும் எனவும்; அதற்கான காசை கொடுத்து விடுவதாகவும் மாணவியிடம் கூறியுள்ளார், பேராசிரியர்.

கல்லூரி மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு!- கைது செய்ய கோரி மாணவிகள் போராட்டம்!

அதற்கு மாணவி தன்னை தன் பெற்றோர்கள் அதுபோன்று எங்கேயும் வெளியே அனுப்பமாட்டார்கள் எனவும்; தானே இதுவரை அது போன்று எங்கு சென்றும் பிரின்ட் அவுட் எடுத்தது இல்லை எனவும், எதற்காக என்னிடம் அப்படிக் கேட்டீர்கள் என்றும் மாணவி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, நீயும் நமது சாதியைப் பெண். அதனால் நட்பை வளர்க்கலாம் எனப் பேராசிரியர் அந்த ஆடியோவில் பேசுகிறார். இதே போலத் தான் எழுதிய புத்தகங்களை மாணவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆடியோ குரல் என்னுடையது இல்லை!:உதவிப்பேராசிரியர் பேசியதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொன்னேரி காவல்துறையினர் இதுகுறித்து கல்லூரியில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின்போது உதவிப்பேராசிரியர் இந்த ஆடியோவில் இருப்பது தமது குரல் இல்லை என்றும்; தன்னை பிடிக்காதவர்கள் அளித்த மொட்டை கடிதப் புகார் என்றும் கூறி வருகிறார்.

கல்லூரியிலும் 3 பெண் பேராசிரியர்களைக் கொண்ட மகளிர் குறைதீர்க்கும் குழுவைக் கொண்டு விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையைக் கல்லூரி இயக்குநருக்கு அளித்துள்ளதாகக் கல்லூரி முதல்வர் சேகர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் கல்லூரி வாயில் முன் கூடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி உதவிப்பேராசிரியர் மகேந்திரனை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மாணவர்கள் போராட்டம்:அப்போது கல்லூரி வாயிலில் குழுமியிருந்த மாணவர்கள் வழிவிடாமல் பேராசிரியரை ஏற்றிச்சென்ற காவல்துறை வாகனத்தைத் தாக்கியதால் சிறிது பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மாணவர்களை அப்புறப்படுத்தி உதவிப் பேராசிரியர் மகேந்திரனைக் காவல் நிலையம் கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவிப்பேராசிரியர் மகேந்திரன் மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் பாலியல் ரீதியிலான தொல்லைகள் அளித்துள்ளதாகவும், வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவர்கள் அமைப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:Video:'பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டுகிறது' : மாணவிகள் பரபரப்பு வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details