தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொங்கலோ பொங்கல்' - சமத்துவப் பொங்கலில் அசத்தும் மக்கள் - திருவள்ளூரில் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

pongal celebration
சமத்துவ பொங்கல்

By

Published : Jan 15, 2020, 1:50 PM IST

திருவள்ளூர்: சுகாதாரத்துறை பணியாளர்களுடன் சமத்துவப் பொங்கல்!

திருவள்ளூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில் குமரன் புதுமையாக உரக்கிடங்கில் பணிபுரியும் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் சமத்துவப் பொங்கலை கொண்டாடினார். அங்கு அவர்கள் வாசலில் வண்ண கோலமிட்டு, அலங்கரிக்கப்பட்ட பானையில் அனைவரும் ஒன்றுகூடி பொங்கலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும், திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் உரக்கிடங்கு சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு புத்தாடை, கரும்பு ஆகியவற்றை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

தூத்துக்குடியில் பொங்கலோ பொங்கல்!

தூத்துக்குடி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் செல்வபூபதி தலைமையிலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் சார்பிலும் நடைபெற்ற பொங்கல் விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

இதில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையில் கலந்து கொண்டு ஊழியர்கள் விழாவை சிறப்பித்தனர். மேலும், அலுவலர்கள் கோலங்களால் அலுவலகத்தை வண்ணமயமாக மாற்றியிருந்தனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர், மோடி, ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details