திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தடபெரும் பாக்கத்தில் உள்ள தாமரைக்குளத்தை தூர்வாரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், பலமாதங்கள் ஆகியும் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்வதால், அந்த கிராம மக்களே கிராம பொது நல சங்கத்தின் மூலம் தூர்வாரும் பணியை தங்களது செலவில் மேற்கொண்டனர்.
சொந்த செலவில் குளத்தை தூர்வாரும் மக்கள்! - thiruvallur
திருவள்ளூர்: குளத்தை தூர்வார மனு அளித்தும் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளிக்காத நிலையில், கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் குளத்தை தூர்வாரும் பணியைத் தொடங்கினர்.
திருவள்ளூர்
மேலும் அவர்கள், திருவள்ளூரில் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் தற்போது வறண்டு உள்ள நிலையில்
தாமாக முன் வந்து அவற்றை தூர்வாருவதற்கு அனுமதி கேட்பவர்களுக்கு, உடனடியாக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அனுமதி கிடைக்கப்பட்டால் பல நீர்நிலைகள் தூர் வாரப்படும் என்றும் இதன்மூலம் போதிய மழை நீரை சேகரிக்க முடியும் என கோரிக்கை வைத்தனர்.