திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே தேவி மீனாட்சி நகரில் வசிக்கும் மூன்று நபர்களுக்கு தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் கங்காதரன், திருவள்ளூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினார்கள்.
அக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், "பொதுமக்களுக்கு இன்னும் தீநுண்மி தொற்று குறித்து அச்சம் வரவில்லை. அலட்சியப்போக்குடன் நடந்துகொள்வதால் பலருக்குத் தொற்று பரவுகிறது.
பொதுமக்கள் எப்போதும் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநபர்களை வீட்டுக்குள் சேர்க்காதீர்கள். பெரும்பாலும் அருகிலுள்ள கடைகளுக்கு வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்தே சென்று பொருள்களை வாங்குங்கள்" என அறிவுரை கூறினார்.