திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரத்தில் செயல்பட்டுவரும் காவலர் பயிற்சிப் பள்ளியில் கடந்த நான்கு மாதங்களாக 143 பேருக்கு காவல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களுக்கான பயிற்சி நிறைவடைந்ததையடுத்து நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில், குற்ற ஆவண காப்பக கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
‘காவலர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்’ - காவல் இயக்குநர்
திருவள்ளூர்: பயிற்சி முடித்து பணியில் சேரும் காவலர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என கூடுதல் காவல் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதில் பயிற்சி முடித்த காவலர்கள் சிலம்பாட்டம், தேரோட்டம், ராட்டினம், கண்ணன் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வினித் தேவ், ‘இதுபோன்ற அசத்தல் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பழைய நினைவுகள் வருகிறது. மேலும் காவலர்கள் தங்களது பணியினை மனசாட்சியுடன் செய்ய வேண்டும்’ என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள், பயிற்சி பெற்ற காவலர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.