திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தினர்.
திருவள்ளூரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுநருக்கு போலீஸ் வலை - Police seize liquor bottles in Tiruvallur
திருவள்ளூர்: ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Police seize liquor bottles in Tiruvallur
காவல்துறையினரை பார்த்த ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை விட்டு தப்பிச்சென்றார். உடனே காவல்துறையினர் ஆட்டோவில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
TAGGED:
Tiruvallur district news