தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடியக் காரை சாலையில் விட்டுச்சென்ற கொள்ளையர்கள்: போலீஸார் வலைவீச்சு - Theft incident in Gummidipoondi

திருவள்ளூர்: திருடியக் காரை சாலையில் விட்டுச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே திருட்டு

By

Published : Nov 9, 2020, 10:32 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டித் தங்க மோதிரம், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஏகாம்பரம், காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விசாரணை செய்து ஆய்வு நடத்தியதில், திருடப்படப்பட்ட காரை சாலையோரத்தில் விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், முன் பகை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா? அல்லது கொள்ளை முயற்சியா? என வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details