தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி சாலையில் திரிந்த வாகனங்கள் பறிமுதல் - திருவள்ளூரில் தடையை மீறி சாலையில் திரிந்த வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர்: மாதவரம் மூலக்கடை சந்திப்பு அருகே 144 தடை உத்தரவை மீறி சாலையில் திரிந்த வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வாகன ஓட்டிகளை எச்சரித்த காவல் துறையினர்
வாகன ஓட்டிகளை எச்சரித்த காவல் துறையினர்

By

Published : Mar 30, 2020, 9:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் மூலக்கடை சந்திப்பு அருகே 144 தடை உத்தரவை மீறி அதிக வாகனங்கள் சாலையில் திரிந்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்த மாதவரம் காவல் துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களை அனுப்பிவைத்தனர்.

பின்னர், அப்பகுதியில் சந்திப்பு சாலை அருகே ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், லாரிகள், கூட்டமாக வந்த பொதுமக்கள் ஆகியோரை எச்சரித்த காவல் துறையினர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால், அவ்வழியே வரும் 108 அவசர ஊர்தி மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டன.

வாகன ஓட்டிகளை எச்சரித்த காவல் துறையினர்

இதையும் படிங்க: 'என்னோட பையன எப்படி நீ அடிக்கலாம்' சாலையில் சண்டையிட்ட காவலர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details