திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மார்க்கெட் பகுதியில் நடைபாதைக் கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் தலைமையில் சாலையோரக் கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
ஆவடியில் நடைபாதைக் கடைகள் அகற்றம் - வியாபாரிகள் வேதனை! - ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் : ஆவடியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், சிறு, குறு தொழிலாளர்கள் இது குறித்து வேதனைத் தெரிவித்துள்ளனர்.
ஆவடியில் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தும் பணி
சுமார் 200 மீட்டர் தூரம் வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில், கரோனா காலத்தில் வருவாய் இன்றி ஏற்கனவே தாங்கள் தவித்து வரும் இச்சூழலில், தங்களது கடைகளை அப்புறப்படுத்தியது மிகுந்த வேதனை அளிப்பதாக சிறு, குறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.