தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக இருந்து வருகிறது. தொற்றின் தாக்கம் கடந்த ஆண்டை காட்டிலும் பலமடங்கு உயர்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் அறங்காவலர் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன், அறங்காவலர் சாரிட்டபிள் டிரஸ்ட் கார்த்திகேயன், திருவள்ளூர் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.