திருவள்ளூர்:கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் கிராமம் மீனாட்சி நகரில் வசிக்கும் தங்கராஜ் மகன் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் கண்ணன். இவர் மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பழைய இரும்பு கம்பெனிக்கு சென்று மாலை 7 மணியளவில் வீடு திரும்புவதை வழக்கம். அதுபோல், நேற்று (ஏப்.20) இரவு 12.00 மணியளவில் வீட்டிற்கு வெளியே நிறுத்திய இருசக்கர வாகனத்தை யாரோ அடையாளம் தெரியாத நபர் திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து, அவரது இரண்டு மகன்களாகிய கண்ணன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் காரில் திருடுபோன இருசக்கர வாகனத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு சிசிடிவியில் பதிவான காட்சியில் இருந்த ஒருவர் தங்களின் இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்டு மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச்சென்றுள்ளார்.