திருவள்ளூர் அடுத்த புட்லுார் ரயில் நிலையத்தில் மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என மொத்தம் ஏழு பேர், மூன்று மாத பெண் குழந்தையுடன் நேற்று காலை வந்துள்ளனர். இதில் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகம் அடைத்த பொதுமக்கள், பெண்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சகி பெண் வள மையத்தின் நிர்வாகி ஞானசெல்வி மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.