தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 கடைகளில் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - தொடர் திருட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Mar 11, 2022, 9:31 AM IST

திருவள்ளூர் மசூதி தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. பாஜக செயற்குழு உறுப்பினரான இவர் திருவள்ளூர் வடக்கு ராஜவீதியில் பால் நிலையம் நடத்தி வருகிறார். இவர், மார்ச் 09ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடைகளுக்கு பால் விநியோகம் செய்து விட்டு கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த 23 ஆயிரம் ரூபாய் பணம், ஐஸ்கிரீம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் என்பவரது கடையில் 19 ஆயிரம் ரூபாய் பணம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைக் பொருள்கள், சிசிடிவி கேமரா திருடுபோனது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பாபி, உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல் துறையினர், தடயங்களை சேகரித்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ.75 லட்சம் மோசடி-7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த சிபிஐ

ABOUT THE AUTHOR

...view details