தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆயிரம் எனக்கு 40 ரூபாய் சாமிக்கு - உண்டியலை உடைத்து திருட்டு - குற்றச் செய்திகள்

பழைய கொள்ளையர்கள் பானியில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து கோயில் உண்டியலில் பணம் திருடிய இளைஞரின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat கோயில் உண்டியலில் பணம் திருட்டு
Etv Bharat கோயில் உண்டியலில் பணம் திருட்டு

By

Published : Sep 10, 2022, 6:48 PM IST

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த தாராச்சி பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறக்கப்படும். அந்நேரங்களில் பக்தர்கள் சிவ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (செப். 09) வெள்ளிக்கிழமை வழக்கம் போல் சிவன் கோயிலில் பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு சென்ற நிலையில் காலை திறப்பதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதில், 10ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சில்லறையாக இருந்த 40 ரூபாய் மட்டும் உண்டிலேயே வைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து பூசாரி அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோயிலில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த பதிவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பழைய காலத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களை நினைவூட்டும் வகையாக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு அரைகுறை ஆடையில் கோயிலில் உள்ளே நுழைகிறார். பின்னர் கோயில் உண்டியலில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

கோயில் உண்டியலில் பணம் திருட்டு

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி பதிவிகளைக் கொண்டு அந்த 25 வயது மதிக்கத்தங்க இளைஞர் யார் என்பதை ஊத்துக்கோட்டை காவல் துறயினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது - 600 மாத்திரைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details