திருவள்ளூர் மாவட்டம், விடையூர் ஊராட்சியில் பொதுமக்கள் காவல் துறையினரின் நல்லுறவு, கரோனா விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "காவல் துறை பொது மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். காவல்துறை எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் பொது மக்களின் பிரச்சனைகளுக்காக முதலில் ஓடி வந்து உதவி செய்யும்.
ஆகவே, தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து அனைத்து காவலர்களையும் தவறாக எண்ண வேண்டாம். ஒரு சில காவலர்கள் செய்யும் தவறால் அனைத்து காவல்துறை அலுவலர்களின் பெயரும் கெட்டுவிடுகிறது.
எந்த நேரத்திலும் உதவி செய்ய காவல்துறை காத்திருக்கிறது" என்றார். விடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு தற்போது சில தளர்வுகள் அளித்திருந்தாலும் பொது மக்கள் விழிப்புடன், தனித்திருக்க வேண்டும்.