தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா போதையில் 5 இளைஞர்கள் வெறிச்செயல் - மூவருக்கு கத்தி குத்து - மூவரை தாக்கிய இளைஞர்கள்

திருத்தணி அருகே கஞ்சா போதையில் இருந்த ஐந்து இளைஞர்கள், மூவரை தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா போதையில் 5 இளைஞர்கள் வெறிச்செயல்
கஞ்சா போதையில் 5 இளைஞர்கள் வெறிச்செயல்

By

Published : Jan 28, 2022, 9:30 AM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே நல்லாட்டூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம் (55), தேசன் (62), இவரது மகன் பாக்கியம் (53). இவர்கள் மூவரும் கடைத்தெருவிற்கு பொருள்கள் வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை ஓரமாய் போக சொல்லியுள்ளனர்.

அப்போது, தமிழ்ச்செல்வன் (23), அகிலன் (21), அஜய் (23), தமிழழகன் (21), தினகரன் (17) ஆகியோர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் இவர்கள் ஐந்து பேரும் இணைந்து ஆறுமுகம், பாக்கியம், தேசன் ஆகியோரை கடுமையாகத் தாக்கி, கத்தியால் குத்தியதாக, கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மூவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கனகம்மாசத்திரம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details