திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, திருவாலங்காடு ஆகியப் பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக மதுப்பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தகவலின் பேரில் அப்பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், திருத்தணி அமிர்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி(55), தனது பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.