தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற அதிமுக பிரமுகரை போலீஸ் வலைவீச்சு

சட்டவிரோதமாக விஷ நெடியுடன் கூடிய மதுபாட்டில் விற்பதற்கு இடமளித்த திருவள்ளூர் அதிமுக நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினரான கந்தசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற அதிமுக நகர்மன்ற உறுப்பினரை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற அதிமுக நகர்மன்ற உறுப்பினரை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.

By

Published : May 1, 2022, 9:31 AM IST

திருவள்ளூர்: மணவாள நகர் பகுதியில் அதிமுக நகர செயலாளர் கந்தசாமிக்கு சொந்தமான கட்டடத்தில் சட்டவிரோதமாக
விஷத்தன்மையுள்ள மதுபாட்டில் விற்கப்படுவதாக மணவாள நகர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் விஷத்தன்மையுள்ள மது பாட்டில்களை விற்று வந்த காளிதாஸ், சேவியர் இருவரை மணவாள நகர் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள 144 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும், விஷத்தன்மையுள்ள மது பாட்டில்களை சட்ட விரோதமாக தனது கட்டடத்தில் விற்க அனுமதி கொடுத்த அதிமுக நகர செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான கந்தசாமி உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கந்தசாமி மீது கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட்டபோது மோசடியிட்டு ஈடுபட்டதாக வழக்கு ஒன்றில் கைதாகி அண்மையில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். தற்போது, மேலும் அவர் மீது மதுபாட்டில் சட்டவிரோதமாக விற்க இடமளித்தது தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'காரணம் கூறாமல் தீர்வு காணுங்கள்' - உபி அரசை சாடிய அகிலேஷ்!

ABOUT THE AUTHOR

...view details