திருவள்ளூர்:மத்திய அரசால் செய்யப்பட வேண்டிய ரயில்வே திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதாக பாமக சார்பில் திருவள்ளூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பாமக கட்சியின் முக்கிய தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பாமக சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர்கள் ஆலப்பாக்கம் சேகர், கும்மிடிப்பூண்டி ரமேஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்பு துணைச் செயலாளர் நா.வெங்கடேசன் வரவேற்க, மாவட்ட செயலாளர் கே.என்.சேகர், தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் பாலயோகி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.