திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார்.திருத்தணியில் நேற்று திருத்தணி கமலா திரையரங்கம் அருகே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழ்நாட்டிற்கானஉரிமைகளை வென்றெடுக்க அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், 'எதிர் வேட்பாளர் திமுக ஜெகத்ரட்சகன் 10 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஆனால், தொகுதிக்காக ஒரு துரும்பைகூட செய்யவில்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு பண மூட்டையுடன் வருவார். இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். மது ஆலைகள் மற்றும் பல கல்லூரிகள் வைத்துள்ள அவர்இங்கு ஒரு பள்ளியோ, கல்லூரியோ, தொழிற்சாலையையோ அமைக்கவில்லை' என குற்றச்சாட்டினார்.