பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து திட்டமிடப்பட்டபடி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவு: திருவள்ளூரில் 89.49 தேர்ச்சி! - பிளஸ் டூ தேர்வு
திருவள்ளூர்: பிளஸ் டூ தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.