தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 லட்சம் பனை மரங்கள் நடும் திட்டம்! 35,000 விதைகள் நடும் பணியை தொடங்கிய அதானி துறைமுகம் - Planting one lakh palm trees

திருவள்ளூர்: ஒரு லட்சம் பனை மரங்கள் நடும் திட்டத்தில் முதல்கட்டமாக 35 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி திருவள்ளூரில் தொடங்கியது.

ஒரு லட்சம் பனை மரங்கள் நடும் திட்டம்!

By

Published : Sep 5, 2019, 9:58 AM IST

Updated : Sep 5, 2019, 10:04 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒரு லட்சம் பனை மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் அதானி துறைமுகம் சார்பில் முதல் கட்டமாக 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

காட்டுப்பள்ளி கடற்கரையை ஒட்டிய பக்கிங்காம் கால்வாய் ஓரங்களில் 10 லட்சம் ரூபாய் செலவில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

அதானி துறைமுகத்தின் அருகில் பனைமரம் நடும் பணி

இந்த பூஜையில் அதானி துறைமுகத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சீனிவாசன் ரெட்டி, சுற்றுச்சூழல் தலைமை நிர்வாகி சதீஷ்குமார், அதானி அறக்கட்டளை முதுநிலை திட்ட அலுவலர் நடனசபாபதி, திட்ட அலுவலர்கள் தீன்சா, கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Last Updated : Sep 5, 2019, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details