திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து, நீர்மட்டமும் குறைந்து கொண்டே வரும் நிலையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட ஏரிகளின் மீது இயற்கை ஆர்வலர்கள் மரக் கன்றுகளை நடவுசெய்து வருகின்றனர்.
அதனடிப்படையில் கும்மிடிபூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர் ஜோதி ராமலிங்கம், ஆசிரியர் தமிழ்வாணன், வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், சமூக ஆர்வலர்கள் சுரேஷ், தசரதர் ஆகியோர் ஏற்பாட்டில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வு அப்பகுதி வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுபோன்று சமூக அக்கறையுடன் செயல்பட்டால், எதிர்வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையே இருக்காது என்றும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதால், மரம் வளர்ப்பில் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் கூறினார்.