திருவள்ளூர்:சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அருமந்தை கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவராக பட்டியலினத் தலைவர் விக்ரமன் என்பவர் தற்போது உள்ளார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து துணைத்தலைவர் உள்ளிட்ட சிலர் ஊராட்சிக்கூட்டம் நடைபெறும்போதெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அவ்வப்போது கொலை முயற்சி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரையில், அவ்வாறு 2 முறை அவர் வாகனத்தில் செல்லும்போது கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சில நபர்கள் அளித்த பொய்ப்புகாரின்பேரில், சுதந்திர தினத்தன்று கொடியேற்றி விட்டு திரும்பியபோது, 30க்கும் மேற்பட்ட காவலர்கள் அவரை சுற்றி வளைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல் நிலையத்திற்குச்சென்ற ஊராட்சி மன்றத்தலைவர், தற்போது வரை எங்கு சென்றார்? என காணவில்லை என்று ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அருமருந்தை கிராம மக்கள் புகாரளித்தனர்.