திருவள்ளூர்:பொன்னேரி வட்டம் பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மக்களுடைய குடிசை தொழிலானது மண்பாண்டம் செய்யும் தொழிலாகும். இவர்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
மேலும் அவர்கள் வசிக்கும் பகுதியில் மண்பாண்டங்களை செய்வதற்கான பதம் நிறைந்த களிமண் கிடைக்கவில்லை. சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடப்பாக்கம் ஊராட்சி தத்தமஞ்சள் மற்றும் காட்டூர் ஏரி உட்பட்ட பகுதிக்கு செல்லவேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் வருடத்திற்கு ஒரு முறை களிமண் எடுக்க நிரந்தர அனுமதி அளிக்குமாறு மண்பாண்டம் குலாலர் நல சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் (AD mines) துறை அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.