தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 9:44 PM IST

ETV Bharat / state

40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு!

திருவள்ளூர்: ஆசிரியர்களுக்கு 40 வயது வரை மட்டுமே பணி வழங்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்து ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி நீண்ட காலமாக காத்திருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Petition seeking repeal of the Teachers' Work Act for persons under 40 years of age
Petition seeking repeal of the Teachers' Work Act for persons under 40 years of age

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று (அக்.20) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து நிறுவன தலைவர் அருணன் கூறுகையில், ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு என்று பதிவு செய்யப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறோம். தற்போது தமிழ்நாடு அரசு 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. இதனால் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நீண்ட காலமாக காத்திருந்து தற்போது ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

ஆகையால் அந்தச் சட்டத்தை ரத்து செய்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் நசுக்கப்படுகின்றனர். அவர்களின் கனவை பாழாக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனுவை வழங்கி உள்ளோம்'' என்றார்.

இதையும் படிங்க:ஹத்ராஸ் வழக்கு: மாயமான மருத்துவமனை சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details