கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாளுக்கு நாள் நோயளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி வேனை சோதனை செய்துள்ளனர். அப்போது, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.