தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்! - திருவள்ளூர் பெரியார் சிலை அவமதிப்பு

பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையைச் சேதப்படுத்திய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பெரியார் சிலை சேதம்
பெரியார் சிலை சேதம்

By

Published : Dec 27, 2021, 12:07 PM IST

திருவள்ளூர்:பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை ஒருவர் சேதப்படுத்தியுள்ளார்.

பின்னர், சிலையைச் சேதப்படுத்திய நபர் இன்று அதிகாலை பொன்னேரி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதையடுத்து, காவல் துறையினர் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையைத் துணியால் மூடினர். மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், காவல் துறையினர் சரணடைந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் செல்லக்கிளி என்பது தெரியவந்துள்ளது. மேலும், எதற்காகச் சிலையைச் சேதப்படுத்தினார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details