திருத்தணி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் ராஜ்குமார் என தந்தை, மகன் இருவரும் வெட்டப்பட்ட வழக்கில், அவரது சகோதரி திருத்தணி காவல் நிலையத்தில் உறவினருடன் சென்று, ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நியாயம் கேட்க சென்றுள்ளார்.
பெண்ணிடம் தவறான வார்த்தை பேசியதற்காக முற்றுகையிடப்பட்ட காவல் நிலையம்.!! - thiruthani people Siege police station for speaking the bad word to a woman
திருவள்ளூர்: திருத்தணி காவல் நிலையத்தில் உயர் காவல் அதிகாரி பெண்ணிடம் தவறான வார்த்தை பேசியதாக அடிக்கப் பாய்ந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணிடம் தவறான வார்த்தை பேசியதற்காக முற்றுகையிடப்பட்ட காவல் நிலையம்
பெண்ணிடம் தவறான வார்த்தை பேசியதற்காக முற்றுகையிடப்பட்ட காவல் நிலையம்
அப்போது காவல்துறை ஆய்வாளர் முருகன், அப்பெண்மணியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து அடிக்க பாய்ந்தனர்.
இதுகுறித்து திருத்தணி காவல் நிலையம் தலைமை எழுத்தர் அந்தோணி, பொதுமக்களிடம் சமாதானம் பேசினார்.