தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட மாஸ்டர் ரசிகர்கள் - Salem Latest News

மாஸ்டர் திரைப்படத்தை காண தமிழ்நாடு அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் ரசிகர்கள் திரையரங்ககுகளில் குவிந்ததால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தை கைப்பேசியில் படம்பிடிக்க மக்கள்
மாஸ்டர் படத்தை கைப்பேசியில் படம்பிடிக்க மக்கள்

By

Published : Jan 13, 2021, 1:56 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.13) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களிலுள்ள ஒரு சில திரையங்குகளில், சிலர் படத்தினை கைப்பேசியில் படம்பிடித்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசத்தை அணியாமல் பலர் படத்தினை கண்டு வருவதால் கரோனா தொற்று அதிகரிப்பதற்கான சூழல் நிலவுவதாக பொதுக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட மாஸ்டர் ரசிகர்கள்

இதையும் படிங்க:வெளியானது 'மாஸ்டர்' - திரையரங்குகளில் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details