திருவள்ளூர்: அதிகத்தூர் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மின்சாரத்திற்காகக் கூடுதலாக அதிகத்தூர் பகுதியில் உயர் மின் அழுத்தக் கோபுரம் அமைக்கும் பணியைத் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாததால் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் திடீரென கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அருகே உள்ள மற்றொரு உயர்மின் அழுத்த ஓரத்தில் சுமார் 80 அடிக்கு மேல் ஏறி தற்கொலை செய்துகொள்வேன் எனப் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு இதனையடுத்து, அவரை மீட்கும் பணியில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பணிகளை நிறுத்தி வாகனங்களை மற்றும் பணி ஆட்களை அனுப்பினால் மட்டுமே கீழே இறங்கிவருவதாகத் தெரிவித்தது அடுத்து உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வாகனங்களை வெளியே அனுப்பியதைப் பார்த்த பிறகு அந்நபர் கீழே இறங்கி வந்தார்.
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு இதைத்தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அனுப்பப்பட்டு இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் உயர் மின் கோபுரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு இதையும் படிங்க:'அதிமுக தலைவர்களை ஒடுக்க நினைக்கும் பாசிச திமுக அரசு!'