தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடி மாநகராட்சி அலுவலக வாயலில் பாய் விரித்து ஆர்ப்பாட்டம்! - ஆவடி மாநகராட்சி அலுவலக வாயல் முன்பு நூதன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: ஆவடி குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்ததையடுத்து, வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்து மாநகராட்சி அலுவலக வாயலில் பாய் விரித்து படுத்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

people protest

By

Published : Nov 1, 2019, 11:36 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. அதேபோல் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளிலும் அதிக அளவில் மழைப்பொழிவு காணப்பட்டது.

இந்நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34ஆவது வார்டான காந்தி நகர், இம்மானுவேல் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அலுவலக வாயலில் பாய் விரித்து ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் ஆவடி மாநகராட்சி அலுவலக வாயிலில் குடிபெயர்ந்து, பாய் விரித்து படுத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்ற முன்வராத மாநகராட்சி அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக மாவட்டச் செயலாளர் தம்பி வெட்டிக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details