தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..! - கொட்டு மழையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது

திருவள்ளூர்: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க கோரி கொட்டும் மழையில் பொதுமக்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
உண்ணவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

By

Published : Dec 1, 2019, 8:50 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயிலில் 50-க்கும் மேற்பட்ட கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டார்குப்பம் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 60 கோயில்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

இது குறித்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உண்ணவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணவிரத்தில் ஈடுபட்டனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த சோழவரம் காவல் துறையினர், தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதையும் படிங்க: ஆவடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details