தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நியமனம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்! - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடிய நடத்திய ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பயிற்சியளித்து பணி நியமனம் செய்யப்பட்ட 526 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

people protest
தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி ஆர்பாட்டம்

By

Published : Nov 26, 2019, 12:55 PM IST

சிஐடியு மாநில செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகள் பின்வருமாறு:

  • உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 25 மாத நிலுவைத் தொகையை அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
    தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி ஆர்பாட்டம்
  • ஊராட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு 11,236 ரூபாய் ஊதியமும், துப்புரவு தொழிலாளர்களுக்கு 9234 ரூபாய் ஊதியமும் வழங்கிட வேண்டும்.
  • மூன்று ஆண்டுகள் பணி முடித்த துப்புரவு தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பயிற்சி அளித்து பணி நியமனம் செய்யப்பட்ட 526 தொழிலாளர்களுக்கும் உடனடியாக பணி வழங்கிட உத்தரவிட்ட வேண்டும்.
  • 526 கிராம ஊராட்சியில் பணிபுரியும் உள்ளாட்சித் தொழிலாளர்களுடைய குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

பின்னர், இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: பெண் பக்தரை அறைந்த அர்ச்சகரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details