திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகளில் ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த அனல் மின் நிலைய வாயிலில் ஊழியர்களுக்கு எதிரான மின்வாரிய செயல்பாடுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்திப்பட்டு அனல் மின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மின்வாரிய ஊழியர்கள்
திருவள்ளூர்: ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் மின்வாரியத்தைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பேரிடர் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய மின் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காததற்கும், அவர்கள் பெற்றுவந்த சலுகைகள் பறிக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தனர். ஊழியர்களின் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களை மின்வாரியம் ரத்து செய்ததற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்றும், ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது.