திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வைத்தியநாதன் (21) தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைகழகத்தில் உயிரியியல் தொழில்நுட்ப படிப்பில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் வைத்தியநாதன், உயிரியியல் தொழில்நுட்ப துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்த அறிக்கை, உயிரியியல் தொழில்நுட்ப துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உடைந்த எலும்புகளுக்கு தீர்வு
விபத்துக்களில் உடைந்த எலும்புகள் பல மாத சிகிச்சைக்குப் பின்னரே ஒன்று கூடும் நிலை உள்ளது. இச்சூழலில், முறிந்த எலும்புகள் விரைந்து சேர்வதற்கான ஆராய்ச்சியை வைத்தியநாதன் மேற்கொண்டு வந்தார்.
அதன் பிரதிபலனாக எலுப்புகளை விரைந்து ஒன்றிணைக்கும் கய்டோசன் என்ற பயோ பாலிமருடன், தொற்று பாதிப்பு ஏற்படா வண்ணம் சில்வர் நானோ துகள்கள் கலந்து தயாரித்த கலவையை முறிந்த எலுப்புகளுக்கு இடையே நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்வதால் முறிந்த எலுப்புகள், 15 நாள்களுக்குள் ஒன்று கூடும் என்ற ஆராய்ச்சி அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில் வைத்தியநாதன் சமர்ப்பித்தார்.
கும்மிடிப்பூண்டி இளம் ஆராய்ச்சியாளர் வைத்தியநாதன் குடும்பத்தினருடன் ஆய்வு சக்சஸ்
அவரது அறிக்கையை ஏற்ற மத்திய அரசின் உயிரியியல் தொழில்நுட்பத் துறை, 2021ஆம் ஆண்டின் இளம் சாதனையாளர் விருதான இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்காலர்ஸ் விருதினை வழங்கியது. அதேபோல் பாக்ஸ் க்ளூஸ் மற்றும் ஜி நியூஸ் இணைந்து 2021ஆம் ஆண்டின் இந்தியா பிரைம் குவாலிட்டி எஜூகேஷன் என்ற விருதும் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்த இளம் ஆராய்ச்சியாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், விருதுகளையும் வழங்கி வருகின்றனர்.