தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாம்பல் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு: கிராமத்தைவிட்டு வெளியேறும் மக்கள்! - சாம்பல் கழிவு

திருவள்ளூர்: மீஞ்சூர் வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Ass wastes affected people in thiruvallur
கழிவுநீர் பிரச்னையால் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்கள்

By

Published : Aug 25, 2020, 2:12 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகள், குழாய்கள் மூலம் கிராமத்தின் அருகே குளத்தில் சேகரித்து, லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த குளத்திலிருந்த சாம்பல் கழிவுகளால் பாதிப்பு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தன. தற்போது 38 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

சாம்பல் கழிவுகளை குலத்திற்கு கொண்டு செல்லும் ராட்சத பைப்பில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு கிராமத்தில் புகுந்துவிடுவதால், அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு முற்றிலுமாக கிராமத்தை சாம்பல் கழிவு நீர் சூழ்ந்ததால், அனல் மின் நிலைய அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், இது குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக கூறப்பட்ட மக்கள் சாம்பல் கழிவுநீரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பல் கழிவு நீர் சூழ்ந்து இருப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து, குடிநீர் பருக முடியாத நிலையில் உள்ளது.

மேலும், சாம்பல் துகள்கள் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், உடல் அரிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details