தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் குறை தீர்க்கும் தொடர்பு திட்ட முகாம்! - திருவள்ளூர்

திருவள்ளூர்: திருத்தணி அருகே மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

By

Published : Aug 22, 2019, 7:38 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டையில் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, வீட்டுமனைப்பட்டா, முதியோர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 3 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 184 ரூபாய் மதிப்பில் 1064 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் தொடர்பு திட்ட முகாம்!

முன்னதாக, திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மன் நிதியிலிருந்து ரூபாய் 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடையை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details