தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழஞ்சூர், பாப்பன்சத்திரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க கோரிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க ஊரக தொழில்துறை அமைச்சரிடம் அவ்வூர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

people demanding to join palanjur pappanchatram to tiruvallur revenue
பழஞ்சூர், பாப்பன்சத்திரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க கோரிக்கை

By

Published : Dec 22, 2020, 5:05 PM IST

திருவள்ளூர்:செம்பரம்பாக்கம் அடுத்த பாப்பன்சத்திரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்ட கிளினிக்கை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது, செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வின்சென்ட் பாப்பன்சத்திரம், பழஞ்சூர் கிராம மக்கள் சார்பில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமினிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், "பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள நான்கு கிராமங்கள் உளளன.

மினி கிளினிக்கை தொடங்கிவைத்த அமைச்சர்

பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்கள் நிலம் சம்பந்தப்பட்ட வருவாய், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்டவை மட்டும் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தாலுகாவில் இணைக்கப்பட்டது. மற்ற அனைத்து துறைகளும் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகாவில் உள்ளது. எனவே, பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராம மக்களின் நலன்கருதி காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திலிருந்து பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் முழுமையாக இணைக்கவேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பெஞ்சமின், அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க:‘இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நெசவாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details