திருவள்ளூர்:திருத்தணி நகராட்சி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ளது, அனைத்து மகளிர் காவல் நிலையம். திருத்தணி தொகுதியில் உள்ள 3 லட்சம் மக்களின் ஒரே காவல் நிலையமாகவும், அனைத்து மகளிர் காவல் நிலையமாகவும் இந்த காவல் நிலையம் செயல்படுகிறது. இந்நிலையில், இந்த காவல் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தற்போது வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்களுக்கு அமர்ந்து பெட்டிஷன் எழுதுவதற்கு ஒரு இடம் இல்லை. மேலும், இந்த காவல் நிலையத்தில் குடிதண்ணீர் வசதியும் இல்லை. குழந்தைகளுடன் வரும் பொதுமக்களுக்கு அமர்வதற்கு என இடமில்லை என புகார்கள் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் உள்ள கால்வாய் மீது அமர்ந்து பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.