திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது தாயார் விஜயராணி இறந்ததையடுத்து அவரது சடலத்தை அடக்கம் செய்ய ஜெயநகர் இடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். நகராட்சிக்குச் சொந்தமான இந்த இடத்தினை தனியாருக்கு விற்றதால் தற்போது இங்கு சடலத்தை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டது. விஜயராணியின் சடலத்தை இரண்டு மணி நேரமாக அடக்கம் செய்யவிடாமல் காலம் தாழ்த்தி வந்ததால், சடலத்திலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.
அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் உரிமை கொண்டாடி வருவதால் சடலங்களை புதைக்கும் இடுகாட்டைக் காணவில்லை என காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுடன் இறந்தவரின் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.