திருவள்ளூர்:கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் இந்தியா முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், அக்டோபர் இறுதியில் கரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன.