தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2020, 11:58 PM IST

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: மக்களுக்குச் சேவை செய்தவர்களுக்கு கைதட்டி பாராட்டு

திருவள்ளூர்: கரோனா வைரஸ் தாக்குதல் மக்களுக்குப் பரவாமல் இருக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணிபுரிந்த அனைவரையும் பொதுமக்கள் கை தட்டி பாராட்டினர்.

மக்களுக்கு சேவை செய்தவர்களுக்கு பாராட்டு
மக்களுக்கு சேவை செய்தவர்களுக்கு பாராட்டு

கரோனா தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு சுய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த உத்தரவை ஏற்று திருவள்ளூர் முழுவதும் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள், மக்கள் கூட்டம் அதிகம் வரும் வணிக வளாகங்கள் ஆகியவை முற்றிலுமாக மூடப்பட்டன. இதனால், மக்கள் நடமாற்றமின்றி இன்று மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் மனித உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவும் இங்கு உயிர்ச்சேதம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

வெறிச்சோடி காணப்பட்ட திருவள்ளூர் மாவட்டம்

மேலும், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தேவையான ஆலோசனைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறும்போது திருவள்ளூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கண்ட்ரோல் அறையில் வந்த தகவல் மூலம் அவசர காலத்தில் அவரை மீட்டு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்ய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “தங்களைப் பற்றி கவலைப்படாமல் வெளியில் பணிபுரியும் காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக மாலை 5 மணியளவில் மக்கள் அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

இதையடுத்து, திருவள்ளூரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகக் களத்தில் வீரத்துடன் களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, ஊடகவியலாளர்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கைதட்டினர். மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தனது இல்லத்தில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடன் ஒன்றுகூடி கைதட்டி மரியாதை செலுத்தினர்.

கை தட்டி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

இதையும் படிங்க: மருத்துவர்களுக்கு சக மருத்துவர் விஜய பாஸ்கர் எழுதிய பாராட்டு மடல்!

ABOUT THE AUTHOR

...view details