தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேஷனல் ஹெரால்டு வழக்கை கண்டித்து திருவள்ளூரில் சத்தியாகிரகப்போராட்டம்! - Congress leader Mother Sonia false case against Congress MP Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., மீது போடப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கை கண்டித்து திருவள்ளூரில் அமைதி வழி சத்தியாகிரகப் போராட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.

நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கை கண்டித்து- திருவள்ளூரில் அமைதி வழி சத்தியாகிரகம் போராட்டம்
நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கை கண்டித்து- திருவள்ளூரில் அமைதி வழி சத்தியாகிரகம் போராட்டம்

By

Published : Jul 27, 2022, 9:23 PM IST

திருவள்ளூர்:காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது மத்திய பாஜக அரசு நேஷனல் ஹெரால்டு வழக்கைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி வழி சத்தியாகிரகப் போராட்டம் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில காங்கிரஸ் செயலாளரும் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை சந்திரசேகர் கலந்துகொண்டு மத்திய அரசை எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

பின்னர் பேசிய பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், 'மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு கேள்வி கேட்ட காரணத்திற்காக இஸ்லாமியர் வீடுகள் மீது ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக தலை தூக்காது. தாமரை மலராது. தற்போது இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்’ என்றும் சூளுரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேலும் இந்நிகழ்வில் திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜான் ஏகாட்டூர் ஆனந்தன், பொருளாளர் சசிகுமார், அருள்மொழி, தேவராஜ், வடிவேல், திவாகர், தளபதி மூர்த்தி, சரவணன் ,பூண்டி ராஜா ,விக்டர் சந்திரன், அருள், தமிழ், பழனி, முகுந்தன், சிவசங்கர், உள்ளிட்டப் பல பேர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கை கண்டித்து- திருவள்ளூரில் அமைதி வழி சத்தியாகிரகம் போராட்டம்

இதையும் படிங்க:நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details