தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் வருமா வராதா... என்ற பேச்சுக்கே இடமில்லை -அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தல் வருமா, வராதா என்ற கேள்விக்கே இடமில்லை, கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

minister pandiarajan

By

Published : Nov 23, 2019, 10:24 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்மொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், 2102ஆம் ஆண்டுக்கான பயனாளிகளுக்கு சுமார் 1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வர இருக்கிறது. மிகச் சிறந்த முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

வருமா, வராதா என்ற கேள்விக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு 90 விழுக்காடு நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர்

இதையும் படிங்க: ரூ.26 கோடி மதிப்பில் நீதிமன்ற இணைப்பு கட்டடம் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறப்பு
!

ABOUT THE AUTHOR

...view details